search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் ஆலோசனை மையம்"

    தமிழ் மாநில காங்கிரஸ் மகளிரணி சார்பில் ‘மகளிர் ஆலோசனை மையம்’ தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, மகளிர் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.
    சென்னை :

    தமிழ் மாநில காங்கிரஸ் மகளிரணி சார்பில் ‘மகளிர் ஆலோசனை மையம்’ தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் நடந்தது. மகளிரணி தலைவர் ராணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பானு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று, மகளிர் ஆலோசனை மையத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசுகையில், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாறவேண்டும் என்றால் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடும் தண்டனை விதிக்கவேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்து, பெண்கள் நிம்மதியாக நடமாடுவார்கள். பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள எங்கள் ஆலோசனை மையத்தை அணுகி, தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தால் உரிய தீர்வை எங்கள் நிர்வாகிகள் ஏற்படுத்தி தருவார்கள்” என்றார். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த துணைத்தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகளுடன், ஜி.கே.வாசன் கலந்துரையாடினார். இதில் அரசியல், போராட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக கல்லூரி மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ஜி.கே.வாசன் பதில் அளித்தார். இறுதியில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. 
    ×